4 വകഭേദങ്ങളിലും 21 നിറങ്ങളിലുമാണ് ??????? ?????? ലഭ്യമാകുന്നത്. ??????? ?????? മോഡലിന്റെ വില, സവിശേഷതകള്, മൈലേജ് തുടങ്ങിയ വിവരങ്ങള് ചുവടെ നല്കുന്നു. ??????? ?????? മോഡലിന്റെ ഓണ്റോഡ് വിലയും ഇഎംഐ വിവരങ്ങളും ഇവിടെ പരിശോധിക്കാം. മറ്റു കോമ്പാക്ട് സെഡാൻ മോഡലുകളുമായി ??????? ?????? മോഡലിനെ താരതമ്യം ചെയ്യാനും നിങ്ങള്ക്ക് അവസരമുണ്ട്.
വകഭേദങ്ങൾ | എക്സ്ഷോറൂം വില |
---|---|
കോമ്പാക്ട് സെഡാൻ | Gearbox
|
₹ 7,24,000 |
കോമ്പാക്ട് സെഡാൻ | Gearbox
|
₹ 7,59,000 |
വകഭേദങ്ങൾ | എക്സ്ഷോറൂം വില |
---|---|
കോമ്പാക്ട് സെഡാൻ | Gearbox
|
₹ 8,34,000 |
കോമ്പാക്ട് സെഡാൻ | Gearbox
|
₹ 8,69,000 |
ഗിയർബോക്സ് | ഇന്ധന തരം | മൈലേജ് |
---|---|---|
പെട്രോള് | 18.5 | |
ഡീസല് | 24.4 |
காம்பேக்ட் செடான் கார்களில் அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட கார் மாடல்களில் ஒன்று ஃபோர்டு ஆஸ்பயர். ஃபோர்டு ஃபிகோ காரின் அடிப்படையிலான மாடலாக இருந்தாலும், அதன் சுவடு எங்கும் தெரியாமல் ஓர் முழுமையான செடான் கார் போன்று டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.
க்ரோம் வில்லைகளுடன் அழகிய க்ரில் அமைப்பு, கச்சிதமான ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பம்பருடன் கூடிய பனி விளக்குகள் அறை என முகப்பு அம்சமாக இருக்கிறது. இந்த காரில் 15 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மாடலில் டெயில் லைட் க்ளஸ்ட்டர் மற்றும் பம்பர் அமைப்பு மாறுதல்களுடன் கவர்ச்சியாக இருக்கிறது.
உட்புறத்தில் கருப்பு மற்றும் பீஜ் என இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இறுக்கிறது. டேஷ்போர்டு டிசைன் மிகவும் சிறப்பாகவும், பிரிமீயமாகவும் தெரிகிறது. அதற்கு இணையாக இருக்கை அப்ஹோல்ஸ்ட்ரியும், போதுமான இடவசதியை அளிக்கும் கேபினும் இதற்கு வலு சேர்க்கின்றன.
ஃபோர்டு ஆஸ்பயர் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.
இதுதவிர, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் ஃபோர்டு ஆஸ்பயர் கிடைக்கிறது. இந்த எஞ்சின் 121 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும் வழங்கப்படுகிறது.
மூன்று எஞ்சின்களுமே மிகச் சிறந்த செயல்திறனை வழங்குகின்றன. குறிப்பாக, புதிய 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் செயல்திறன் குறிப்பிட்டு சொல்லும்படியாக இருக்கிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உன்னதமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது.
ஃபோர்டு ஆஸ்பயர் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.4 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 26.1 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஃபோர்டு ஆஸ்பயர் காரில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. சிங்க்-3 என்ற நவீன தொழில்நுட்பத்தை பெற்றிருப்பதுடன், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் மற்றும் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பாரக்கிங் சென்சார்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் ஹில் லான்ச் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
சிறப்பான தோற்றம், நவீன தொழில்நுட்ப வசதிகள், அதிக பாதுகாப்பு வசதிகள் மற்றும் சரியான விலை போன்றவை இந்த காரின் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை பெற்ற கார் என்பது இதனை தேர்வு செய்வதற்கான கூடுதல் மதிப்பை வழங்குகிறது.