12 വകഭേദങ്ങളിലും 6 നിറങ്ങളിലുമാണ് മാരുതി സുസുക്കി സെലറിയോ ലഭ്യമാകുന്നത്. മാരുതി സുസുക്കി സെലറിയോ മോഡലിന്റെ വില, സവിശേഷതകള്, മൈലേജ് തുടങ്ങിയ വിവരങ്ങള് ചുവടെ നല്കുന്നു. മാരുതി സുസുക്കി സെലറിയോ മോഡലിന്റെ ഓണ്റോഡ് വിലയും ഇഎംഐ വിവരങ്ങളും ഇവിടെ പരിശോധിക്കാം. മറ്റു ഹാച്ച്ബാക്ക് മോഡലുകളുമായി മാരുതി സുസുക്കി സെലറിയോ മോഡലിനെ താരതമ്യം ചെയ്യാനും നിങ്ങള്ക്ക് അവസരമുണ്ട്.
വകഭേദങ്ങൾ | എക്സ്ഷോറൂം വില |
---|---|
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
|
₹ 4,53,363 |
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
|
₹ 4,58,881 |
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
|
₹ 4,92,679 |
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
|
₹ 4,98,190 |
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
|
₹ 5,16,191 |
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
|
₹ 5,42,664 |
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
|
₹ 5,48,175 |
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
|
₹ 5,58,709 |
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
|
₹ 5,66,187 |
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
|
₹ 5,70,715 |
വകഭേദങ്ങൾ | എക്സ്ഷോറൂം വില |
---|---|
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
|
₹ 5,72,664 |
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
|
₹ 5,78,187 |
ഗിയർബോക്സ് | ഇന്ധന തരം | മൈലേജ് |
---|---|---|
പെട്രോള് | 21.63 | |
സിഎന്ജി | 30.47 |
கடந்த 2014ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி செலிரியோ கார் பட்ஜெட் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த மாடலாக மாறி இருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் கார் மாடல் என்ற பெருமையுடன் நகர்ப்புற வாடிக்கையாளர்களை கவர்ந்தது. கடந்த 2017ம் ஆண்டு சிறிய மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த காரில் கம்பி வலை அமைப்புடைய க்ரில் அமைப்பு இரண்டு ஹெட்லைட்டுகளையும் இணைக்கும் விதத்தில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. க்ரில் அமைப்புக்கு மேலே க்ரோம் பீடிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் பெரிய ஏர்டேம் பகுதி, வலிமையான பம்பர் அமைப்புடன் வசீகரிக்கிறது.
இந்த காரில் பக்கவாட்டில் வலிமையான பாடி லைன்கள் கவர்கின்றன. மேலும், நேர்த்தியான வடிவமைப்பு மூலமாக அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் திருப்தி படுத்துகிறது. பின்புறத்தில் பாடி லைனுடன் இணைந்து நிற்கும் டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்பும், வலிமையான பம்பர் அமைப்பும் காரின் வசீகரத்தை அதிகரிக்கின்றது.
உட்புறத்தில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்்டு இருக்கிறது. இந்த காரின் கேபின் போதுமான இடவசதியுடன் சற்றே பிரிமீயம் உணர்வை தருகிறது. இந்த கார் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.
மாருதி செலிரியோ காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணையான 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த கார் சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடல் எஞ்சின் 58 பிஎச்பி பவரையும், 78 என்எம் டார்க் திறனையும் அளிக்கிறது.
இந்த காரின் எஞ்சின் மிக சீரான பவர் டெலிவிரியை வழங்குகிறது. காரின் எடையை அனாயசமாக சமாளிக்கிறது இதன் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின். மேலும், நடுத்தர வேகத்தில் அருமையான பவர் டெலிவிரியை உணர முடிகிறது. க்ளட்ச் இலகுவாக இருப்பதுடன், கியர்ஷிஃப்ட் அதிர்வுகள் குறைவாக இருப்பதும் இதன் பலமாக கூறலாம். இதன் க்ளட்ச் மற்றும் எஞ்சின் ஆகியவை நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறப்பான தேர்வாக இருக்கிறது.
புதிய மாருதி செலிரியோ கார் லிட்டருக்கு 23.10 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று தெரிவிக்கிறது. இந்த காரில் 35 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. சிஎன்ஜி மாடல் கணக்கீடுகளின்படி, கிலோவுக்கு 31.79 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. பெட்ரோல் டேங்க் மற்றும் எரிவாயு கலனை சேர்த்து 60 லிட்டர் எரிபொருள் கொள்திறனை பெற்றிருக்கிறது.
புதிய மாருதி செலிரியோ காரில் பாடி கலர் கதவு கைப்பிடிகள் மற்றும் பம்பர்கள் உள்ளன. டர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்ட சைடு மிரர்கள் உள்ளன. டாப் வேரியண்ட்டில் அலாய் வீல்கள் உள்ளன. எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், 60:40 விகிதத்தில் மடக்கக்கூடிய பின் இருக்கைகள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், சென்ட்ரல் லாக்கிங் டோர்கள், கீ லெஸ் என்ட்ரி ஆகிய வசதிகள் உள்ளன.
இந்த காரில் ஆட்டோ டவுன் வசதி கொண்ட பவர் விண்டோ மற்றும் சைடு மிரர்கள் உள்ளன. மேலும், ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் வைப்பர் - வாஷர் வசதி, எஞ்சின் இம்மொபைலைசர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.
மாருதி செலிரியோ காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகச் சரியான தேர்வாக கூறலாம். குறைவான பராமரிப்பு செலவு, அதிக எரிபொருள் சிக்கனம், ஓட்டுவதற்கு உற்சாகத்தை தரும் தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரை நம்பர்- 1 நகர்ப்புற பயன்பாட்டு மாடலாக முன்னிறுத்துகிறது.